Thursday, May 2, 2019

வேதாந்த வகுப்பு தொடங்கியது !

சார்! அதெல்லாம் வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? இரண்டில் ஒன்று. தெரியும்னா தெரியும்னு சொல்லுங்க. தெரியல்லன்னா தெரியல்லன்னு சொல்லுங்க-- இது போன்று பட்டுக் கத்தரித்தாற்போல் சில சமயம் சொல்லிவிட முடிகிறதாஒரு வேதாந்த வகுப்பு. கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியுள்ளனர்காரணம் மிகச்சிறந்த வேதாந்த ஞானி ஒருவர் வந்து வகுப்பு எடுப்பதாக ஏற்பாடுஅவர் வகுப்பு எடுத்தால் சித்யந்தே சர்வ சம்சயா: தான். அதாவது சந்தேகங்கள் பொடிப்பொடியாக ஆகிவிடும்கற்பதில் தாகம். காத்திருக்கும் ஆர்வம். சொன்னதைப் பற்றிக் கொள்ளும் கற்பூர புத்திபோதும். இதைவிட என்ன வேண்டும் ஒரு வேதாந்த வகுப்பிற்குஅந்த வேதாந்த போதகர் கொடுத்து வைத்தவர்தான்ஆனால் நடந்தது என்ன

போதகர் வந்தார்தொடங்கும் பொழுதே ஒரு கேள்வியைக் கேட்டார்"நான் இப்பொழுது எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?" 

"அறிவோம். அறிவோம்.." 

"அப்படியென்றால் உங்களுக்கு அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. நன்றி

எழுந்து போய்விட்டார் போதகர்கற்க வந்தோர் புரியாமல் விழித்தார்கள். 'நாம் ஏதாவது தவறாகக் கூறிவிட்டோமா?' என்று கவலையுற்றனர்எப்படியோ அவரிடம் போய் மீண்டும் வருமாறு ஒரு நாள் அழைத்து வந்தனர்மீண்டும் அதே கேள்விஅதெல்லாம் ஒரு தடவை சூடு. இரண்டு மடங்கு உஷார் அல்லாவா

"நான் இப்பொழுது எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?" 

"தெரியாது....தெரியாது...தெரியாது.." 

"அப்படியென்றால் உங்களுக்கு அதைப்பற்றி நான் எந்த விதத்திலும் கூறி விளக்கவே முடியாது. வீண்வேலை. நன்றி." 

எழுந்து போய்விட்டார் போதகர்என்னடா இது கஷ்ட காலம்!! இப்படிச் சொன்னாலும் தப்பு. அப்படிச் சொன்னாலும் தப்புன்னா என்னதான் பண்றது. ஆனால் மிகப்பெரிய ஞானி அவர். அவரிடம் கற்பது என்பது அவ்வளவு பாக்கியம். எப்படியும் நாம் நழுவ விடக்கூடாது என்று முழுமூச்சாய் இறங்கி மீண்டும் அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தனர். ஆனால் பலத்த முன் யோசனை, முன் ஏற்பாடுவந்தார். தொடங்கும் போது மீண்டும் அதே கேள்வி
ஐயய்யோ.......உஷார் உஷார்.... பாதி பேர் தெரியும் என்றார்கள். பாதி பேர் தெரியாது என்றார்கள்அப்பாடா! ஒரு வழியாக சமாளித்து விட்டோம்

"அப்படி என்றால் 'தெரியாது' என்று சொன்னவர்கள், 'தெரியும்' என்று சொன்னவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்." 

எழுந்து போய்விட்டார் போதகர்கற்க விழைந்தோர் அழாக்குறையாகச் சோர்ந்து அமர்ந்துவிட்டனர்நம்பிக்கை போய்விட்டதுஎப்படி வேதாந்த பாடம் கேட்பது என்றே தெரியவில்லையேமகாஞானி ஒருவர் நமக்குக் கிடைத்தும் நம் துர்பாக்கியம் இவ்வளவுதானாசரி. கடைசி வாய்ப்பு ஒன்று பார்க்கலாம். பிறகு தெய்வம் விட்ட வழிபெரும்பாடு பட்டு அழைத்து வந்தார்கள்யாருக்கும் எந்த முன்னேற்பாடும் இல்லை. எந்த பதைபதைப்போ எதிர்பார்ப்போ எதுவும் இல்லைஎன்ன நடக்குமோ! நம் கையில் என்ன இருக்கிறது? நடந்தால் சரி. இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நம் தலையெழுத்துநிராசையின் உச்சத்தில் இருந்தார்கள் அனைவரும்தொடக்கம். மீண்டும் அதே கேள்வி
யாருக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லைதங்களுக்குப் பதில் சொல்லத் தெரிந்த விதத்தில் எல்லாம் சொல்லிப் பார்த்தாயிற்றுஇனி தங்கள் பாக்கெட் காலியோசனை கூட எதுவும் இன்றி அமைதியாக இருந்தார்கள் அனைவரும்
போதகர் முகத்தில் ஒரு திருப்தியின் ரேகை. மெல்லிய முறுவல்

"பரவாயில்லியே. இந்த வகுப்பில் வேதாந்தம் சொன்னால் புரியும் போல இருக்கே....இனி ஆரம்பிப்போம்." 

வகுப்பு நடந்தது

*** 

No comments:

Post a Comment