சும்மா அளக்காதீங்க..
அளப்பது என்பது to measure. எவ்வளவு வகையான அளத்தல் இருக்கின்றன? நாழி முகவாது நானாழி என்று கேள்விப்பட்டிருப்போம். இத்தனை மடங்கு இது, இந்த உயரம் இருக்கும், இதுனால பத்து மடங்கு, இருங்க ஒன்று, இரண்டு, மூன்று -- இவ்வாறெல்லாம் அளவைக்கான பேச்சுகள் நம் காதில் விழுந்திருக்கும். ஆங்கிலத்தில் டிகிடல். அனலொக் என்றெல்லாம் சொல்வார்கள். பண்டைய தமிழகத்தில் ஏழுவகை அளவைகளைக் கூறுகின்றனர். நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், எண்ணியளத்தல் என்பன.
பெய்தளர்த்தல் - எண்ணை முதலியவை அளக்கப்படும் விதம்.
சார்த்தியளத்தல் -- அளவோடு அளவை ஒப்பிட்டு அளத்தல்
தெறித்தளத்தல் -- இசைக் கருவியைப் புடைத்து அதன் ஒலியை கேட்டு அளத்தல்.
தேங்க முகந்து அளத்தல் - தானியங்களையும், அரிசியையும் படியினைக் கொண்டு முகந்தளத்தல். இவற்றை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் மாத்திரைக்கு அளவு கூறும் சூத்திரத்திற்கு உரை வரையுங்கால் கூறுவர்.
எனவே சும்மா அளக்காதீங்க. என்ன அளவை என்று சொல்லிவிட்டு அளந்திடுக.
***
No comments:
Post a Comment