Friday, May 3, 2019

என்ன ஆகுமோ யார்கண்டா?

கடைசியில் நம் கதி என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்படாத மனிதன் யார்? அந்த ஈற்றுக் காலத்தில், என்ன ஆகுமோ என்ற பயத்தை நீக்கி ரட்சிப்பேன் என்ற சத்திய வாக்கு மூவர் தந்திருப்பதாகக் கூறுவர். மூன்று அவதாரங்கள் அவ்விதம் ஈற்றுப் பேற்றுக்கான பயத்தைப் போக்கி அடைக்கல ச்லோகங்கள் தந்திருப்பதாகக் கூறுகிறார் ஸ்ரீ வேதாந்தவாசிரியரான ஸ்ரீநிகமாந்த தேசிகர் என்னும் ஆசார்ய ஸார்வபௌமர். அவை ஸ்ரீவராஹப் பெருமான் அருளிய வராஹ சரம ச்லோகம்ஸ்ரீராமர் அருளிய ஸ்ரீராம சரம ச்லோகம்ஸ்ரீகிருஷ்ணர் அருளிய ஸ்ரீகிருஷ்ண சரம ச்லோகம்இதில் ஸ்ரீராம சரம ச்லோகமானது ‘என்னைச் சரணடைந்தவரை ஒருகாலும் கைவிடேன்இது என் விரதம்’ என்ற உறுதிப்பாட்டை மனிதனுக்குத் தருவதுஇந்த அர்த்தத்தை ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் தமிழ்ச் செய்யுளாக்கிக் கொடுத்திருக்கும் பாங்கே அழகு!.

ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கடிமை ஆகின்றேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும்
அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனைவர் நினைவினாலும்
இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஒன்று என்று
நெறி உரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே

பொருள் -- ஒரே தடவை சரணம் அடைந்துவிட்டவர்க்கும், ‘உனக்கு அடிமை’ என்று வாக்காலே ஒரு முறை கூறிவிட்டவர்க்கும்சிறிதும் குறைவு படாமல் அனைத்து விதமாகவும் அனைத்து பேரிடமிருந்தும் எவ்விதக் கேடும் இன்றி அபயமாக என் அருள் கொடுப்பேன். -இது என் விரதம்வேதமனைத்திலும்ஒளிரும் முனிவர் நினைவாகிய ஸ்ம்ருதிகளிலும்அறிந்தவர்களுடைய செயல்களின் பிரகாரமும்என் இசைவினாலும் இந்த விரதத்தில் நின்றும் நான் எந்தக் காலத்தும் தவறேன்.

(ஸ்ரீ அபய பிரதாந ஸாரம் செய்யுள் 16 ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன்


No comments:

Post a Comment