Thursday, May 2, 2019

படிப்பின் தூபம்

என்ன முயன்றும் என்ன உழைத்தும் 
ஏதோ ஒன்று நிற்கிறது 
செய்யப்படாமல் போகிறது 
முடியாச் செயலில் 
அன்றைய பகலும் போகிறது 
அடுத்த உதயமும் வருகிறது

படுக்கையோரம், படிக்கட்டில்
நுழையும் வாயிலில் நிலைக் கதவில் 
முறைத்துக்கொண்டும், முனகிக் கொண்டும் 
முனிவன் போலே காத்துக்கொண்டும் 

சற்றும் நகராமல் நிற்கிறது 
சொல்லிப் பயனிலை 
காத்துக்கொண்டே நிற்கிறது
நேற்றைய கவலைகள் சேர்ந்ததனால் 
இன்று சுமந்து கனக்கிறது 

போகப் போகப் பாரம் கூடி - நம் 
பலத்தையும் விஞ்சிப் போகிறது 
கனவின் சுமையெனக் கனக்கிறது 
காணும் இடமெலாம் நெருக்குவது

நின்று கழியும் நாள் தோறும் 
நெருக்கிய காலக் குள்ளர்களாய் 
வடபுலக் கதைகளில் வருவதுபோல் 
வானைச் சுமக்கும் அடிமைகளாய் 
வெறிதே செல்லும் நம்காலம்.

(லாங்ஃபெலோ அவர்களின் Something Left Undone என்ற கவிதையின் தமிழாக்கம்

*** 



No comments:

Post a Comment