பாரதியாரின் அருமையான பாடல்களிலே ஒன்று 'அழகுத் தெய்வம்' என்று தலைப்பில் வருவது. 'மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்' என்னும் பாடல். இதில் மூன்றாவது கண்ணியில் இப்படி வருகிறது.
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
முதல் இரண்டு வரிகள் - ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்; நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலம் என்றாள்.
அடுத்த இரண்டு வரிகள் - ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்; எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்.
நினைத்தது நடக்கும் என்றால் அப்புறம் ஏன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடும் என்ற நிச்சயமின்மை.
பாரதியாரின் இந்தப் பாடல் கையெழுத்துப் பிரதியாக இருந்து 1922ல் தான் அச்சுக்கு வருவதாகத் தெரிகிறது திரு சீனி. விசுவநாதன் அவர்களது பதிப்பின் படி பார்த்தால்.
பாரதியாருக்கே கொஞ்சம் குடைச்சல் கொடுத்த பாடல் இது போல இருக்கிறது. ஏனெனில் கையெழுத்துப் பிரதியின் படத்தில் பார்த்தால் பாரதியார் முதலில் வரியை ஒரு மாதிரி எழுதி பின்னர் சில வார்த்தைகளை மாற்றி எழுதுகிறார். உதாரணத்திற்குக் 'காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்' என்ற வரியில் கையெழுத்துப் பிரதியில் அந்த வரியில் இருப்பது 'கையாகுமா மென்றாள்' என்பது. ஆனால் அச்சுப் பக்கத்தில் காண்பது கருவியா மென்றாள் என்பது. எப்படி திரு சீனி விசுவநாதன் கவனிக்கத் தவறினார் தெரியவில்லை! அது போல் கடைசி வரியில் அதாவது 'முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்' என்ற அச்சு வரிக்குக் கீழே கீழ்க்குறிப்பில் 'மோகவிடாய் தீர்ந்தேன்' என்பது கையெழுத்துப் பிரதி என்று குறிப்பு போட்டிருக்கிறார். ஆனால் கையெழுத்துப் பிரதியின் படத்தில் காண்பதோ 'மூர்ச்சித்து நின்றேன்' என்பதை அடித்துக் கீழே 'மோகமது தீர்ந்தேன்' என்று கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் நல்ல வேளை நாம் எடுத்துக்கொண்ட நான்கு வரிகளில் இவ்விதம் அடித்தல் திருத்தல் இல்லை.அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய்
***
No comments:
Post a Comment