Saturday, May 4, 2019

இருபத்தைந்தாம் தத்துவம் ஆனவர் யார்?

புரிந்துகொள்ளும் திறன் கொண்ட மற்ற ஒன்றிற்கே அர்த்தப்படும் அனைத்து உலகப் பொருட்களும் 'பராக்' என்னும் வகையைச் சார்ந்தவை. Knower என்னும் அறிவோனால் அறியப்படும் பிரபஞ்சம் அனைத்தும் Known, அறியப்படும் உலகம் என்று வகைபடுகிறதுஇந்த Knower என்பதற்கு ஞாத்ரு என்று பெயர்ஞா -- அறிவு; ஞாத்ரு -- அறிவோன்ஜீவன் ஞாத்ரு

அது மட்டுமன்று. ஜீவனிடத்தில் இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகள் இருக்கின்றன. அதாவது ஜீவனின் ஞான சக்தியின் விசேஷமான நிலைகள்தாம் இச்சா, க்ரியா சக்திகள். அப்பொழுது ஜீவன் என்பவனின் essential characteristic என்ன ஆகிறது? ஞானம். ஞாதா -- அறிபவன்

அதே ஜீவன் கர்மம் புரிகிறான். அப்பொழுது அவனுக்குப் பெயர் கர்த்தாபோகம் அனுபவிக்கிறான். அப்பொழுது போக்தாஅப்படி என்றால் ஜீவனிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றன. என்னஞாத்ருத்வம் -- அறியும் தன்மைகர்த்ருத்வம் -- செயல் புரியும் தன்மைபோக்த்ருத்வம் -- துய்க்கும் தன்மை; Jiva has three faculties -- the faculty of knowing, the faculty of doing, the faculty of enjoying. இந்த மூன்று தன்மைகளுக்கும் அடிப்படையானது ஞாத்ருத்வம் -- அறிவுஎனவேதான் ஜீவனை 'சித்' என்று பெயரிட்டு அழைக்கிறது ஹிந்து மதம்

சித் -- அறியும் பொருள்சித் ஆக இருக்கும் தன்மைக்குப் பெயர் 'சைதன்யம்'. சைதன்யம் உடையவன் சேதநன்ஜீவன் என்பவன் சேதநன்ஜீவன் என்றால் மனிதராஇல்லை உயிரினம் அனைத்தும் ஜீவர்கள் என்று சொல்லப்படும். ஊர்வன, பறப்பன முதலிய பலவகை ஜீவராசிகளில் ஒருவர் தாம் மனிதரேஎனவே மனிதனை மையப் படுத்தி, மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் மனிதரின் போகத்துக்காக உண்டானவை என்ற எண்ணத்தை ஒரு போதும் ஹிந்து மதம் ஏற்படுத்தியதில்லைபெரும் இயற்கையின் ஓர் அங்கம்தான் மனிதர்

மனிதப் பிறவியில் அறிவாகிய சைதந்யம் நன்கு விளக்கமுற ப்ரகாசிப்பதால் மனிதருக்குப் பெரும் அதிகார அடக்குமுறை பலம் கூடிவிட்டதாக நினைப்பதில்லை ஹிந்து மதம்அதற்குப் பதிலாக அறிவு நன்கு விளங்கப்பெறும் பிறவியானதினால் மனிதருக்குக் கூடுதல் கடமைகளே ஏற்பட்டுள்ளதாய்க் கருதுகிறது ஹிந்து மதம்மற்ற ஜீவராசிகளின் நன்மையையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மனிதனின் கடமை என்று கூறுகிறது ஹிந்து மதம்

காக்கை குருவி எங்கள் ஜாதி 

வானில் திரியும் புள்ளெலாம் நான்
வனத்தில் திரியும் விலங்கெலாம் நான்

என்றெல்லாம் ஒரு ஹிந்துவால் இயல்பாகப் பாடமுடிகிறது
ஏனெனில் அனைத்து உயிரினங்களும் ஜீவ சமுதாயமேநாம் மனிதர் என்பது என்ன வித்யாசம்? அறிவு நன்கு விளங்கப் பெற்ற பிறவியை அடைந்துள்ளோம் என்பதுதான் வித்யாசம்இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அறிவு நன்கு விளங்கக்கூடிய பிறவியை அடைந்துள்ளோம்உண்மையில் அறிவை நன்கு விளங்க வைத்துக்கொள்ளும் அடிப்படைக் கடமை நமக்கு உண்டு. Man has the basic and prime most duty of becoming more and more wise. Ignorance can never be his excuse. இந்த மனிதர் உள்ளிட்ட ஜீவ சமுதாயத்திற்குத்தான் ஜீவன் என்று பெயர்
அதாவது ஜீவன் என்பதற்கு நாம் கூறுகிற அனைத்தும்,மொத்த ஜீவ சமுதாயத்திற்கும் பொருந்தும் என்ற அர்த்தம்

ஜீவனால் அறியப்படும் பிரபஞ்சமோ மிகவும் விரிந்தது. அதை ஏதாவது வகை தொகை படுத்த முடியுமோமுடியும் என்கிறது ஹிந்து மதம். எப்படிஉலகம் ஐம்பூதங்களால் ஆனது. என்ன என்னப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம். (மண், நீர், தீ, காற்று, வானம்.) ஜீவனுக்கான பொறிபுலன்கள் ஐந்துசக்ஷு, ச்ரோத்ரம், ஜிஹ்வா, க்ராணம், த்வக் (கண், செவி, நா, மூக்கு, மெய்) புலன்கள் நுகரும் நுகர்ச்சிகள் ஆவன. ரூபம், சப்தம், ரஸம், கந்தம், ஸ்பர்சம். (உருவம், ஒலி, சுவை, நாற்றம், ஊறு

இந்த ஐந்து பொறிகளும் அறிவுப் பொறிகள் -- ஞான இந்த்ரியங்கள் எனப்படுவனஇவற்றைப் போல் செயலுக்கான ஐந்து இந்த்ரியங்கள் -- வாக்கு, கை, கால், குதம், உபஸ்தம்இவற்றின் தொழில்கள் -- பேசுதல், வேலை செய்தல், நடத்தல், மலம் மூத்திரம் கழிப்பது, சிற்றின்பச் செயல்கள்இந்த அனைத்து அனுபவங்களையும் நடுவில் நின்று வாங்கிப் பிரித்து அறியும் உள் கருவி மனம்

மனத்தைப் பயன் படுத்தி இவற்றை நான் அறிவேன் என்று நான் என்ற முனைப்பாய் இருப்பது அஹங்காரம்இந்த அறியும் புலன்கள், மனம், அஹங்காரம் ஆகிய அனைத்தின் மொத்த உருவாக இருப்பது மஹான் என்னும் தத்துவம்அறியப்படும் பூதங்கள், பூதங்களின் தன்மைகள், பொறிபுலன்கள், மனம், அஹங்காரம், மஹான் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த உருவான தத்துவமாய் இருப்பது ப்ரகிருதி

இந்த தத்துவங்களை நன்கு மனத்தில் நினைவு கொள்வதற்காக பழங்காலத்தில் இந்த தத்வங்களை அரிச்சுவடியில் பொருத்திக் காண்பித்தனர்வரிசையாக தத்துவங்களைப் பட்டியல் இடுவோம்

1) ப்ருத்வி 2) அப்பு 3) தேஜஸ் 4) வாயு 5) ஆகாசம் 6) வாக்கு 7) கை 
8) கால் 9) குதம் 10) குறி 11) காது 12) கண், 13) மூக்கு 14) நா 
15) மெய் 16) கந்தம் 17) ரூபம் 18) சப்தம் 19) ரஸம் 20) ஸ்பர்சம் 
21) மனம் 22) அஹங்காரம் 23) மஹான் 24) ப்ரகிருதி 

ஆகிய இந்த 24 தத்துவங்களில் இந்த பிரபஞ்சம் அடக்கம் என்கிறது ஹிந்து மதம்சைவ சித்தாந்தம், சாக்த சித்தாந்தம் முதலியவற்றில் இவற்றின் உட்பிரிவுகளும், நுணுக்கமான வகைகளும் தனித்தனி தத்துவங்களாகக் கொள்ளப்பட்டு தத்துவங்களின் எண்ணிக்கை மிகுந்து காணப்படும். ஆயினும் அவை அனைத்தும் இந்த 24 தத்துவங்களின் விரிவே எனலாம்இந்த பிரபஞ்சம் அனைத்தும் அறியப்படும் பொருள்இவற்றை அறியும் பொருள்தான் ஜீவன்

முதல் வரையிலான சம்ஸ்கிருத அரிச்சுவடியில் வர்க்க எழுத்துகளையும் கணக்கில் கொண்டால் '' என்பது இருபத்தைந்தாவது எழுத்தாக வருவது முதல் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு தத்துவத்தைக் குறிப்பதாக நிரலிட்டால், இருபத்தைந்தாவது அக்ஷரமான '' காரம் ஜீவனைக் குறிக்கும்அவனுக்கு 25 ஆம் தத்துவமானவன் என்றும் பெயர் அமைந்தது இக்காரணம் பற்றியே எனலாம்மகாரத்திற்குப் பொருளாய் அமைந்தவன் -- மகார வாச்யன் -- என்ற பெயரும் ஜீவனுக்கு சாத்திரங்கள் கூறுவது இக்காரணம் பற்றியேயாகும்

*** 

No comments:

Post a Comment