அப்பொழுது டிகிரிக்கு முன்னால் பியூஸி இருந்தது. பியூஸியிலேயே முடிவுசெய்ய வேண்டும் என்ன மாதிரியான படிப்பைத் தொடரப் போகிறோம் என்பதை. எகனாமிக்ஸ், காமர்ஸ், ஹிஸ்டரி, லிட்டரேசர் அல்லது சைன்ஸ். பிஸிக்ஸ், கெமிஸ்ட்ய்ரி, மாக்த்ஸ் குரூப் கிடைக்க வேண்டும் என்று முயற்சி. அது கிடைக்கும்வரையில் தற்காலிகமாக காமர்ஸ் குரூப்பில் ஓர் இரண்டு நாள் அமரும் வாய்ப்பு கிடைத்தது. எகனாமிக்ஸ் வகுப்பு. லெக்சரர் பேசியதைக் கேட்ட பின் என்ன ஒரே அபிப்ராயங்களாக இருக்கிறதே என்று எண்ணம். பிறகு முதல்க்ரூப் கிடைத்து சையன்ஸ்ஸுக்கு ஓடிவிட்டேன். அப்பொழுதெல்லாம் எகனமிக்ஸ் என்றால் ஆடம் ஸ்மித், கெயின்ஸ், மார்ஷல், ஷொம்பீட்டர், பால் சாமுவல்ஸன், கார்ல் மார்க்ஸ், சோஷலிஸம், காப்பிடலிஸம் இப்படித்தான் காதில் விழும். அதனுடைய தத்வார்த்த அடிப்படைகள் என்ன என்னும் கேள்வி கேட்க நினைக்கும் உந்துதலாகவே முடிந்துவிடும். முதல் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் தந்தையிடம் கூறியது நினைவில் இருக்கிறது, ‘அபிப்ராயங்களின் மயமாக இருக்கிறதே’ என்று. அது என்னுடைய மிகவும் மேம்போக்கான அபிப்ராயம்தான் என்றாலும் பின்னாளில் எகனமிக்ஸ் பிஹெச்டி பண்ணவர்களோடு பேசின போதும் என் முதல் அபிப்ராயம் கேன்சல் ஆகாதது போலவே ஒரு தோற்றம் எனக்கு இருந்தது.
ஆனால் அயிண்ட் ரேண்ட் அவர்களுடைய நாவல்கள் ஃபௌண்டன்ஹெட், அட்லஸ் ஷ்ரக்ட் ஆகியவை படித்த பின்பு எகனமிக்ஸ் துறையிலேயே ஆஸ்ட்ரியன் எகனமிக்ஸ், லுட்விக் வான் மைஸஸ், எஃப் ஏ ஹெயக், மில்டன் ஃப்ரீட்மன், கார்ல் மென்ஜர் போன்ற பெயர்களும் அவர்களின் கருத்துலகங்களும் பெரும் திறப்பாக இருந்தன. அதுவும் லுட்விக் வான்மைஸஸ் (Ludwig Von MIses) அவர்களின் ஹ்யூமன் ஆக்ஷன் (HUman Action) என்னும் நூல் பெரும் பிரமிப்பு தரும் நூல். எகனமிக்ஸ் என்னும் துறையில் அது அளிக்கும் பங்களிப்பு ஒரு புறம் என்றாலும் பொதுவாகவே மனித செயல்பாடு, மானிடச் செயலூக்கம், மனிதத் தன்மையில் அமைந்திருக்கும் செயல் தத்துவம் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு மிக அகலமான தத்துவ அலசல் என்றால் அந்த நூல்தான்.
முக்கியமாக வான் மைஸஸ் அவர்களது நூலான Human Action என்ற நூலில் பொருளாதார இயக்கத்தைத் தனிப்பட ஒரு துண்டுபட்ட துறையாகக் காணாமல் மனித யத்தனம் என்ற ஒட்டுமொத்தத் துறையின் ஓர் அங்கமாகக் காட்டுகின்றார் வான் மைஸஸ். மனித யத்தனம் என்பதை Praxeology என்ற துறையாக அணுகுகிறார். எப்படி மனித முயற்சிகள் அனைத்திற்கும் பொது தத்வார்த்த அடிப்படைகள் அமைந்திருக்கின்றன, அவை என்ன, அதே தத்வார்த்த அடிப்படைகள் எப்படி Praxeology இன் அங்கமான பொருளாதாரத்திலும் உள் அமைந்து செயல்படுகின்றன, உள்ளார்ந்த இந்த தத்துவார்த்த இயல்பிற்கு விரோதமாக பொருளாதாரம் இயங்கத் தொடங்கும் போது எப்படி குளறுபடியாகிறது என்பதையெல்லாம் அந்த நூலில் விரிவாகக் கூறுகிறார். அவரே சோஷலிஸம் என்பதைப் பற்றிய விமரிசன நூலொன்றையும் எழுதியிருக்கின்றார். Theory of Money and Credit, Epistemological foundations of Economics போன்று பல நூல்கள். கோட்பாடும், சரித்திரமும் என்பதைப்பற்றி Theory and History என்ற நூல் முக்கியமானது.
ஏதோ ஒரு துறையில் ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டும் பற்றிப் படித்துவிட்டு அதிலும் சுருக்க நூல்களாகப் பார்த்து ஓர் ஓட்டு ஓட்டிவிட்டுக் குத்துமதிப்பாக அள்ளிவிடும் பழக்கம் மேலும் மேலும் அதிகரித்து வரும் ஒன்று. இதன் கெடுதியை உணரக் கூடியவர்கள் நிச்சயம் லுட்விக் வான் மைஸஸ் (Ludwig Von Mises) அவர்களின் இந்த வரியின் அவசியத்தை உணர்வார்கள்:
“One of the indispensable prerequisites of a master of economics is a perfect knowledge of history, the history of ideas and of civilization, and of social, economic, and political history. To know one field well, one must also know other fields.”
இது ஏதோ பொருளாதாரத் துறைக்கு மட்டும் பொருத்தம் என்றில்லை. எந்த ஒரு துறையிலும் இருக்க வேண்டிய ஹால்மார்க் குணம் இதுவாக மட்டுமே இருக்க முடியும். லுட்விக் வான் மைஸஸ் தம்முடைய அறிவு சார்ந்த செயல்பாட்டினாலும், தனிப்பட்ட பழக்கம் சார்ந்த ஒத்துணர்ச்சியினாலும் எத்தகைய மனப்பான்மையைச் சுற்றி அவரைச் சூழ்ந்தோர்பால் எழுப்பினார் என்பதை பேராசிரியர் ரால்ஃப் ராய்கோ (Professor Ralph Raico) எழுதுகிறார்:
“No appreciation of Mises would be complete without saying something, however inadequate, about the man and the individual. Mises’s immense scholarship, bringing to mind other German-speaking scholars, like Max Weber and Joseph Schumpeter, who seemed to work on the principle that someday all encyclopedias might very well vanish from the shelves; the Cartesian clarity of his presentations in class (it takes a master to present a complex subject simply); his respect for the life of reason, evident in every gesture and glance; his courtesy and kindliness and understanding, even to beginners; his real wit, of the sort proverbially bred in the great cities, akin to that of Berliners, or Parisians and New Yorkers, only Viennese and softer - let me just say that to have, at an early point, come to know the great Mises tends to create in one’s mind life-long standards of what an ideal intellectual should be.”
இவருடைய நூல்கள் ஏதேனும் தமிழில் மொழிபெயர்ப்பாக வந்துள்ளனவா என்று தெரியவில்லை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment