அழகியமணவாளப் பெருமாள் நாயனாரின் ‘அருளிச்செயல் ரஹஸ்யம்’ என்னும் நூலை வாசிக்கும் போது தோன்றுகிறது. வைணவத்தில் பொதுவாகத் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது எம்பெருமானாரின் கருணையே கருணை! ‘ஆசையுடையோர்க்கெல்லாம் கூறுமின் என்று பேசி வரம்பறுத்தார் பின்’ என்றபடி அனைவரும் தெரிந்துகொள்ள இப்படி வழி வகுத்து வைத்திருக்கிறாரே என்று நெஞ்சம் நனைகிறது.
வைணவத்தையும், ஆழ்வார்களின் அருளிச்செயல் ஆழ்பொருளையும் உன்னி உணரும் போது திருக்கோட்டியூர் நம்பியின் கவலையும், தயக்கமும் புரியவந்து அதுவே எம்பெருமானாரின் பெருங்கருணையை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள வைக்கிறது. முதலில் ஆழ் பொருளை அறிவிக்க ஸ்ரீராமாநுஜரைப் பதினெட்டு தடவை நடையாய் நடக்க விட்டார் என்பது உறுத்துகிறது. ஆனால் ஆழ்வார்களின் தத்துவ ஆழ்பொருள் உலகில் போய்ப் பார்க்கும் போது கடைசியில் சொன்னாரே அதெப்படி மனம் வந்தது, எவ்வளவு கருணை இருந்திருந்தால் திருக்கோட்டியூர் நம்பி சொல்லியிருப்பார் என்றும் தோன்றுகிறது. அப்படியும் தோன்றுகிறது. இப்படியும் தோன்றுகிறது. எம்பெருமானாரின் கருணை இல்லையேல் நம் போல்வார் அறிய வழி இல்லாமல் போயிருந்திருக்கும். ஆனால் ஆழ்வார்களின் அருளிச்செயலின் ஆழ்பொருளை உணர உணர திருக்கோட்டியூர் நம்பியின் கவலையும், பதைப்பும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த inevitable and intrinsic angst ஒரு பக்கமாக முடிவு செய்துவிட முடியாமல் தொடரும் ஒன்று என்றுதான் தோன்றுகிறது. என் செய்வேன் உலகத்தீரே !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment