Wednesday, January 29, 2020

மொழியின் கனிவும் மனிதரின் வன்மமும்

மொழியால் மயங்காதவர்,
மொழியில் மயங்காதவர்,
மொழிக்கு மயங்காதவர்
யார் இருக்கிறார்கள்?

ஒரு கொடி படர்வது போன்ற நளினத்துடன்
மொழி நமது சிந்தையை முழுவதும் ஆக்கிரமித்து விடுகிறதே! வடமொழியில் பழைய வாசகம் ஒன்று சொல்கிறது:

பாஷா ப்ரசஸ்தா ஸுமநோ லதேவ
கேஷாம் ந சேதாம்ஸி ஆவர்ஜயதி?

பொருள்: மங்கலமான மொழியானது ஒரு கொடியைப் போல் தன் நளினமான அழகால் மனத்தை இன்புறச் செய்கிறது. நம் யாருடைய சித்தம்தான் அதனால் ஆட்கொள்ளப்படவில்லை!

மொழியின் தன்மையே இவ்வாறு என்று பழைய வடமொழி வாசகம் ஒன்று கூறுமேயானால், மொழியைக் கடுமையாகவும், மூர்க்கமான கோபத்திற்குக் கருவியாகவும் இன்னாத வழியில் பயன் படுத்துவோரை என்னென்பது! மொழியே இனிமையானது என்னும் போது அதை இன்னாத கூறலாக ஆக்கினால், அந்தோ! அது எப்படி இருக்கிறதாம், கனி கனியாக இருக்கிறதே என்று ஒருவர் நொந்துகொண்டு காயைத் தேர்ந்தெடுத்தால் எப்படியோ அப்படி இருக்கிறதாம்! சொல்கிறார் திருவள்ளுவர்:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

பாஷா ப்ரசஸ்தா ஸுமநோ லதேவ
கேஷாம் ந சேதாம்ஸி ஆவர்ஜயதி?

என்று கேட்கிறது வடமொழி வாசகம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment