Tuesday, January 14, 2020

தூயன் துயக்கன் மயக்கன் - ரிக்வேதம்

பரமாத்மா எப்படிப் பட்டவர்? ஒவ்வொருவருக்கும் அவரது ஆத்மாவே முழு அன்பின் கேந்திரம் ஆத்மாவுக்கு ஆத்மா என்றால் எத்தனை ஒருவருக்குப் பிரியமானவர். ஆனந்தமே வடிவான பரம்பொருளை, பகவானை ஆனந்தத்திலே ஆழ்ந்த ஹ்ருதயத்தால் உணர்கிறேன். அவரோ அனைவருக்கும் பிரியமானவர். ஒளியால் அனைத்தையும் விளங்கச் செய்பவர். தூய்மையே வடிவானவர். தூய்மைப் படுத்துபவர். இவ்வாறு பகவானைத் துதித்துக் காட்டுகிறது ரிக்வேதம்.

அக்நிம் மந்த்ரம் புருப்ரியம்
சீரம் பாவக சோசிஷம் |
ஹ்ருத்பிர் மந்த்ரேபிர் ஈமஹே ||

மந்த்ரம் - மகிழ்ச்சி நிறைந்தது, மாதநம் - களி நிறைந்தது, மயங்கச் செய்வது; புருப்ரியம் - பஹுப்ரியம் என்பது ஸாயணர்.

திருவாய்மொழியில் நம்மாழ்வார்

மாயன் என் நெஞ்சினுள்ளான்
மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் அவனே
காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும்
சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன்
என்னுடைத் தோளிணை யானே.

எப்படி ’தூயன் துயக்கன் மயக்கன்’ என்ற பிரயோகங்கள் விழுகின்றன! மந்த்ரம் சீரம் பாவக சோசிஷம்

அக்நிம் மந்த்ரம் ஹ்ருத்பி: மந்த்ரேபி: - மாயன் என் நெஞ்சினுள்ளான்

ஹிந்துமத ஆன்மிக வரலாறு பல்லாயிர வருஷங்களாக ஒரே உத்வேகத்தின் தொடர்ச்சியாகத்தான் தெரிகிறது.

***

No comments:

Post a Comment