Friday, January 31, 2020

இடைச்சுவரைத் தள்ளி

தம்முடைய ஆசிரியரான ஸ்ரீஆளவந்தார் என்னும் யாமுன முனிவரை நேரடியாகச் சந்தித்திருந்தால், வாழ்நிலையில், தாம் இந்த உலகிற்கும், ஸ்ரீவைகுண்டத்திற்குமே இருக்கும் இடைச்சுவரைத் தள்ளி ஓர் சுழல்படிக்கட்டையே கட்டியிருப்பேன் என்று கூறுகிறார் எம்பெருமானார் என்னும் ஸ்ரீராமாநுஜர். ஆக இந்த மண்ணுலகம் என்பதற்கும் அந்த விண்ணுலகம் என்பதற்கும் இடையில் கடக்கலாகா ஒரு சுவர் இருக்கிறது என்பது புரிகிறது. இந்த மண்ணையே விண்ணாகப் புரிகிற ஊக்கங்கள்தாமே எல்லா ஐடியாலஜிகளும்! முடிந்ததா என்பது சரித்திர மீள்பார்வை. முடியுமா என்பது கிரிட்டிஸிஸம். முடியாது என்றால் பெஸிமிஸம். முடியும் என்றால் ஆப்டிமிஸம். எது முடிகிறதோ அதை ஏற்போம் என்பது ரியலிஸமா? இப்படியே சோழி உருட்டிக் கொண்டும் இருக்கலாம்.

ஆனால் மிஷேல் ஃபூக்கோ அல்லது (கரக்டா உச்சரிக்கணும்னா மைக்கேல் ஃபூகோல்ட் :-) ) என்ன சொல்கிறார் என்பதும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

Truth is a thing of this world.

சரி. இவராவது பரவாயில்லை. பத்தில் ஐந்து பழுதில்லை என்றபடிக் கூறுகிறார் என்று விட்டால், மார்டின் ஹைடெக்கர் என்பவர்

The all-decisive question - What happens when the distinction
between a true world and an apparent world falls away? What becomes of the metaphysical essence of truth?

இவர் அப்படி ஆனால் அடுத்த நிலையில் என்ன ஆகும் என்று யோசி என்கிறார்.

உண்மையே உன் விலை என்ன என்று கேட்கும் உலகில் இருந்து கொண்டுதான், அந்த உலகைப் பற்றித்தான் இவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்பதும் உண்மைதானே ! :-)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment