’ஈதென்ன உலகியற்கை!’, ‘இருள்தருமா உலகத்துப் பிறவி’ என்றெல்லாம் சொல்வதும் ஆழ்வார்கள்தாம் ஒரு நிலையில். ‘கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்’ மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்’ இப்படிச் சொல்வதும் ஆழ்வார்கள்தாம் வேறொரு நிலையில். உலகம் என்று பார்க்கும் பொழுது அதன் நிலை வேறு. உத்தமனுடைய சரீரம் என்று பார்க்கும் பொழுது அதன் நிலை வேறு. இதை ஸ்ரீநாராயண பட்டத்ரியும் பாடுகிறார்:
கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா
பஹுதர பவ கேதாவஹா ஜீவபாஜாம்
இதி ஏவம் பூர்வம் ஆலோசித மஜித
மயா நைவமத்யாபி ஜானே:|
நோ சேஜ்ஜீவ: கதம் வா மதுரதரம் இதம்
த்வத்வபுச் சித்ர ஸார்த்ரம்
நேத்ரை: ச்ரோத்ரைச்ச பீத்வா
பரமரஸ சுதாம் போதி பூரே ரமேரன்||
முன்பெல்லாம் நான் கருதினேன்,
உயிர்களுக்குப் துன்பங்கள் பலவகையாய்
விளையக் காரணமாம்
படைப்பென்னும் காரியம்
கொடுமையிலும் கொடுமை என்று
முன்பெல்லாம் நினைத்தேன் யான்.
அந்தோ! வெல்லவொணா பரம்பொருளே!
இப்பொழுதோ
அவ்வாறு யான் எண்ணவில்லை.
உயிர்கள்தாம்
உணர்வெனும் சுவையே
உருவான நின் திரு மேனியைக்
கண்ணால் கண்டு பருகிக்
காதால் கேட்டுக் களித்து
உயர்வற உயர்ந்த சுவையமுதக் கடலாடி
உன்னத அனுபவமே
வேறு எவ்விதத்தில் தாம்பெறுவர்
படைப்பென்பது இல்லையென்றால்?
(தமிழாக்கம் என்னுடையது)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment