தெற்கு ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையோரம் உள்ள பழைய வியாபார முகத்வார நகரம் அஸ்ட்ரகன் (Astrakhan) என்பது. பதினாறாம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற் வரையும் கூட சுமார் 300 ஆண்டுகள் வைணவ ஸ்தலமாகவும் இது இருந்திருக்கிறது என்றால் கொஞ்சம் நம்பக் கஷ்டமானதாக இருக்கிறதோ? அது மட்டுமில்லை. பஜன்ஸ் இங்கு நடந்திருக்கிறது. விஷ்ணு கோவில் இங்கு இருந்திருக்கிறது. பாரதத்திலிருந்து வியாபாரக் குடும்பங்கள் சிலவும் பலவுமாக இங்கு தங்களின் வெளிநாட்டு காம்ப் பாசறை நகரமாகப் பயன் படுத்தியிருக்கின்றன. காதரைன் தி கிரேட் நம் பாரத வியாபாரிகளுக்குச் சிறப்புச் சலுகைகள் தந்திருந்திருக்கிறாள். பாரஸிகம் முதலிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு வாணிகம் பாரதத்துடன் ரஷியா இந்தியாவை லிங்க் படுத்தி நடத்த பல ஐரோப்பிய அரசுகள் இந்த இடத்தைக் கைபற்ற போட்டி போட்டிருக்கின்றன. அங்கு போய் செட்டில் ஆன பாரத குடும்பங்களில் சிலர் அங்கு உள்ள மக்களோடு கலந்து மிகவும் செல்வந்தர்களாகவும் இருந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு, 18ஆம் நூற் முற்பகுதியில் ’சுகாநந்த்’ என்பவர் 300 ஆயிரம் ரூபிள்ஸ் மதிப்புள்ள சொத்து உடையவராக இருந்திருக்கிறார். ரஷ்ய தேசத்துப் பழம்பதிவுகள் சிலவற்றில் பாரத சாதுக்கள் சிலரை அங்கிருந்த கிராமங்களில் சந்தித்ததாகப் பதிந்தவர் கூறும் அளவிற்கு இருந்திருக்கிறது. இத்தனையும் எந்தப் புராணத்திலும் படிக்கவில்லை. ரஷ்யாவின் ப்ராக்ரஸ் பதிப்பகத்தார் போட்ட நூல்களில் தரப்படும் செய்திகள். அஸ்ட்ரகன் நாம் மேலும் அறிய வேண்டிய பாரதப் பண்பாட்டுத் தலம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment