Sunday, January 12, 2020

அரட்டைதான் .. ஆனாலும்

மென்மையான 'வெஜிடேரியன் நகைச்சுவை உணர்வை' எப்படி வெளியிடுவது? பெரும் அரசியல் சித்தாந்தங்கள், மத ரீதியான வாதப் பிரதிவாதங்கள்.. அன்றாட சமுதாயச் சீர்கேடுகள், அலற வைக்கும் பொருளாதாரச் சீரழிவுகள் -- சார் சார்! வேண்டாம் சார். மாலையில் அலைந்து ஓய்ந்து வந்து ஒரு கப் டீ அல்லது காபி குடித்துக்கொண்டே ஏதாவது மென்மையான நகைச்சுவை மிளிரும் இலக்கியச் சீரக மிளகு ரசம் ஏதாவது சிப் பண்ணிக்கொண்டே.... இந்த மாதிரி நீங்க நினைப்பதுண்டா தெரியவில்லை. ஆனால் நான் நினைப்பதுண்டு. அந்த நேரத்தில் ஏதாவது பெரிய சித்தாந்தப் பண்டிதர்களோ புரட்சி வீரர்களோ வந்தால் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிப் போய் ஒளிந்துகொண்டு விடுவேன். 'கோழைப் பையா! கோழைப்பையா என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆளை விடுங்கப்பா...

அப்படிப்பட்ட தருணங்களில் சில விதமான எழுத்தாளர்களின் எழுத்துகள் மிகவும் தருணத்துக்கு இசைந்து மிக நளினமாகவும், அமைதியாகவும் ரசிக்க வரும். மார்க் ட்வெயின் ஓர் எழுத்தாளர். பழைய எஸ் வி வி ஒருவர். இன்னும் பலர் ஐரோப்பா, ப்ரெஞ்சு, அமெரிக்க, நம் நாட்டு தமிழ், இந்திய ஆங்கில (குறிப்பாக ஆர் கே நாராயணன்) இன்னும் பலர். ஜெரோம் கே ஜெரோம். ரிச்சார்ட் ஆர்மர் (என்ன டேஸ்டுய்யா உன்னுது? சீரியஸ் எழுத்தாளன் சீண்டுவானா நீ சொல்ற ஆட்களையெல்லாம்? -- I don't care :-) You may or may not accept this as a genre in itself. But I have these in my register of my privacy) இதில் தனிப்பெரும் இடம் வகிப்பவர் நமது மிடில் க்லாஸ் ஸ்ரீமான் பி ஜி வோட்ஹௌஸ் என்னும் P G Wodehouse.

*
பண்டைய கிரேக்கம் ஏதன்ஸ், அரிஸ்டாடில், ப்லாட்டோ, ஹோமர் என்ற நினைவு மணங்கள் கமழ இருப்பது. இன்றைய கிரேக்கம் எப்படி? என்பதற்கு ஒரு திசை காட்டியாகச் சினிமா உலகில் இருந்தவர் தியோ ஆஞ்ஜலோபோலஸ். Theo Angelopoulos. ஹாலிவுட் சினிமாத்தனத்திற்கு ஒரு மாற்றமாகத் திகழ்பவை தியோவின் இயக்கக் காட்சிகள். அமைதி, இயல்பு, ஆழ்ந்த நிதானம் இவை காமிராவின் கண்களிலும் நிரம்பியிருக்கலாம் என்று காட்டியவர் தியோ. கவிதையும், தத்துவமும் அவசர அடி உலகின் ஆரோக்கியமான மாற்றாக இருக்க முடியும் என்பதைச் சினிமா வாய்பாட்டை மாற்றிக் காட்டியதின் மூலம் கிரேக்கச் சினிமாவை ஓரடி முன்னெடுத்துச் சென்றவர் தியோ ஆஞ்ஜலோபோலஸ். அவருடைய Eternity and a Day என்னும் படத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்த்த நினைவு.

*

ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று ஒரு ராக்ஷஸன் ஆங்கில இலக்கியத்தில். யாரும் அதைப் படித்துத் தொலைக்காதீர்கள். (அரட்டையின் போது செய்யாதே என்று சொன்னால் செய் என்று அர்த்தம்) படித்தால் நீங்கள் அப்படியே தலைகீழே உல்டா புல்டா ஆகவேண்டியதுதான். மொழி, பொருள், சொல் அமைப்பு, வாக்கியம், உலகம், குறிப்பிடுதல் எல்லாம் ஃபட் ஃபட் டண் டணால்தான். ஏற்கனவே படித்துவிட்டீர்களா? அப்ப நீங்க மட்டும் வாங்க நல்ல பேச்சுத் துணை.

ஆரம்பத்தில் கலைஞனின் வாழ்க்கையில் நாட்கள், டப்ளின் நாட்கள் என்றெல்லாம் சமத்தாகத்தான் எழுதிக்கொண்டிருந்தார். போகப் போகப் பௌர்ணமி காலத்துப் பிசாசு போல் ஆட்டம் தொடங்கிவிட்டது.
உலிஸெஸ் வந்ததுமே கிரகணம் ஆங்கிலத்துக்கு.. ஆங்கிலம் என்பதன் மொழித்தன்மையாகிற மரத்திற்குள்ளேயே ஆவேசமாகப் புகுந்துகொண்டு பேய் அலைச்சல். பகலின் காலில் சலங்கையாகக் கட்டி ஆங்கிலத்தை ஓடவிட்ட நூல் உலிஸஸ். இரவு என்ன பாவம் செய்தது? குற்றுயிரும் குலை உயிருமாய் இருந்த மிச்சம் மீதி ஆங்கிலத்தை ஒற்றை ராத்திரியில் ஊளையிடச் செய்துவிட்ட நூல் ஃபினிகன்ஸ் வேக். இதில் எல்லாம் ஒரு காலத்தில் பைத்தியம். (இப்பவும் ஒன்றும் குணமாகவில்லை) முதலில் பைத்தியம் என்னைப் பிடிக்கும். பிறகு நான் பைத்தியத்தைப் பிடித்து உலுக்க ஆரம்பித்துவிடுவேன். இந்தப் பித்தப் பிதாமகன் எழுதிய இந்த வரிகளைப் பாருங்கள். ஆனால் ஆங்கில உலகில் ஜீனியஸ் என்னும் மேல்மாடியில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட எழுத்தாளர்களில் ஒருவர். நான் செல்லமாக ஏதாவது சொல்வேன். அதை வைத்து... ஆங்கிலப் பேராசிரியர்கள் இருந்தால் கண்ணையும், காதையும் மூடிக்கொள்வீர்களாக! குறளி, பிசாசு, கொள்ளிவாய் எல்லாம் சேர்ந்து மொழிக்குள் ஆட்டம் போடும் நூல் ஃபினிகன்ஸ் வேக்.

நூல் முழுக்க இப்படித்தான் போகும் --

”riverrun, past Eve and Adam's, from swerve of shore to bendof bay, brings us by a commodius vicus of recirculation back toHowth Castle and Environs. Sir Tristram, violer d'amores, fr'over the short sea, had passen-core rearrived from North Armorica on this side the scraggyisthmus of Europe Minor to wielderfight his penisolate war: norhad topsawyer's rocks by the stream Oconee exaggerated themselseto Laurens County's gorgios while they went doublin their mumperall the time: nor avoice from afire bellowsed mishe mishe totauftauf thuartpeatrick: not yet, though venissoon after, had akidscad buttended a bland old isaac: not yet, though all's fair invanessy, were sosie sesthers wroth with twone nathandjoe. Rot apeck of pa's malt had Jhem or Shen brewed by arclight and roryend to the regginbrow was to be seen ringsome on the aquaface. The fall (bababadalgharaghtakamminarronnkonnbronntonner-ronntuonnthunntrovarrhounawnskawntoohoohoordenenthur-nuk!) of a once wallstrait oldparr is retaled early in bed and lateron life down through all christian minstrelsy. The great fall of theoffwall entailed at such short notice the pftjschute of Finnegan,erse solid man, that the humptyhillhead of humself prumptly sendsan unquiring one well to the west in quest of his tumptytumtoes:and their upturnpikepointandplace is at the knock out in the parkwhere oranges have been laid to rust upon the green since dev-linsfirst loved livvy. ”

***

No comments:

Post a Comment