பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப் பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும், கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில் உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி பரிபாஷையாகும். பரிபாஷை என்பதும் சரி, meta என்ற முன்னொட்டும் சரி பன்முகம் கொண்ட சொற்கள். convention, குழூஉக்குறி என்பன ஒரோவழி பரிபாஷையின் பொருள்களில் அடங்கும். ஆயினும் கன்வென்ஷன் என்பது அநாதி காலமாய் வருவதற்குத் தான் முக்கியத்வம் கொடுத்த பொருள். பரிபாஷை என்பதற்கு அஃது முழுதும் அடக்கிய பொருளன்று. குழூஉக்குறி பொதுவில் வெளிப்படுத்தாத மந்தணக் குறிப்பு (ரகஸியக் குறிப்பு) உடையது. பரிபாஷையில் மந்தணம் எதுவும் இல்லை. எனவே, அவையிரண்டும் பரிபாஷைக்குப் போதிய பொருள் ஆகா.இதற்கு meta என்னலே சாலப் பொருத்தம் ஆகும். ஈண்டு பரிபாஷை என்பது முதல் நிலை மொழிக்கு மேல் சிறப்பித்து வரும் இரண்டாம் நிலை மொழியாகும்.
meta -- of a higher or second-order kind (metalanguage)
pp 635, The Concise Oxford Dictionary of Current English,
Seventh Edition, Ed by J B Sykes, Oxford University Press 1986
இனி பரிபாஷை என்பதற்கு வியாகரண உரைகளினின்றும் வரையறைகளைக் காண்போம்.
காசிகா விவரண பஞ்சிகா, காசிகாவ்ருத்திக்கு ஜினேந்திர புத்தி அவர்களால் எழுதப்பட்ட விரிவுரையில், பரிதோ வ்யாப்ருதாம் பா4ஷாம் பரிபா4ஷாம் ப்ரசக்ஷதே.
வேறு ஒரு வரையறை -- பரிதோ பா4ஷ்யதே யா ஸா பரிபா4ஷா ப்ரகீர்த்திதா
துர்க்கஸிம்ஹர் எழுதிய காதந்திர ஸூத்ர வ்ருத்தியில் காணும் வரையறை -- விதௌ4 நியம காரிணீ பரிபா4ஷா.
ஆக நியமமாகக் கொள்ளப்பட்ட சிறப்புமொழிக்கு பரிபாஷா என்று கூறலாம் எனத் தேருகிறது.
பரி என்ற முன்னொட்டிற்கு வருவோம். பரி என்பதை adverb(கர்ம ப்ரவசனீயம்) ஆகவும் பயன்படுத்தலாம். அப்பொழுது அஃது 'ஒன்றைக்குறித்து', 'ஒன்றைச்சுட்டி', 'ஒன்றை விலக்கி', 'ஒன்றைப் பகிர்ந்து' என்ற பொருட்களில் வரும். இங்கு பரிபாஷை என்பதில் ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பொருள் மிகுதி விளைக்கும் முன்னொட்டாக வருகிறது. இவ்வாறு வரும் பொழுது இந்தப் பரி என்பதற்கு யாது பொருள் என்னில், ஆப்தேயின் சம்ஸ்க்ருத அகராதிக் குறிப்பின் படி
परि ind. (Sometimes changed to परी, as परिवाह or परीवाह, परिहास or परीहास) 1 As a prefix to verbs and nouns derived from them, it means (a) round, round about, about; (b) in addition to, further; (c) opposite to, against; (d) much, excessively. -2As a separable preposition it means (a) towards, in the direction of, to, opposite to (with an acc.); वृक्षं परि विद्योतते विद्युत्; (b) successively, severally (with an acc.); वृक्षं वृक्षं परि सिञ्चति 'he waters tree after tree'; (c) to the share or lot of (showing भाग or participation) (with acc.); यदत्र मां परि स्यात् 'what may fall to my lot'; or लक्ष्मीर्हरिं परि Sk.;
இதில் நமது சொல்லமைப்புக்குப் பொருத்தமானது (b) in addition to, further;. மற்றவை எல்லாம் adverb, preposition ஆகிய பயன்பாட்டைக் குறிக்கும்.
உதாரணமாக 'எழுந்தருளப்பண்ணுதல்' என்பதை எடுத்துக்கொள்வோம். சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக் கட்டி, 'சுமந்து வருதல்' என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் தத்துவத்தில் ஈடுபாடு, பக்தி என்பதற்குப் பொருத்தமாக இருக்குமா? எனவே பரிபாஷைச் சொல் பயன்படுத்தப் படுகிறது. தோள் மீது சுமக்கும் பல்லக்கு, அல்லது வாகனத் தண்டு தோளின் மீது பெரும் பாரமாய்த் தொடர்ந்து அந்தக் கைங்கர்யம் செய்வோர்தம் தோள்மீது புடைத்துப் போகும் அளவிற்குச் சிரம சாத்யமானது. ஆனால் விடாமல் அந்தக் கைங்கர்யம் இயற்றப்படுவதன் மர்மம் கைங்கர்ய பரர்களின் பக்தியும், ஈடுபாடும். எனவே அந்தக் கட்டைகளுக்கான பரிபாஷையாக ‘தோளுக்கினியான்’ என்பது பயன்படுகிறது.
இதில் 'உயர்வு' என்ற பொருள் பரி என்பதற்கு வருவதில்லை. அதாவது இந்தச் சொல்லைக் குறிப்பிடுவதா? இதைவிட உயர்ந்த சொல்லாக ஒன்றைக் கொள்வோம் என்ற நோக்கத்தில் பயன்படுத்தப் படுவதில்லை பரிபாஷை என்பது. உதாரணமாக பெருமாளை எழுந்தருளப்பண்ணும் பல்லக்கின் கட்டைகளுக்கு ஆகம ரீதியாக வேறு பெயர் சம்ஸ்க்ருதத்தில் இருந்திருக்கும். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் அதை நீக்கி 'தோளுக்கினியான்' என்பதை பரிபாஷையாகக் கொண்டுவருகிறது.
அதேபோல் பெருமாளுக்குத் 'தாம்பூலம் ஸமர்ப்பித்தல்' என்ற ஸம்ஸ்க்ருத பதங்களை நீக்கி 'அடைக்காய் அமுது' என்று பரிபாஷை கொண்டு வருகிறது. பெருமாளுக்கு க்ஷீரான்னம் ஸமர்ப்பித்தல் என்பதை மாற்றி 'அக்காரை அடிசில்' என்று சொல்வதையே சம்ப்ரதாய ரீதியாக சுத்த ப்ரயோகம் என்று ஆக்கிவைத்திருக்கிறது.
குரக்கினத் தலைவனான சுக்கிரீவன் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் 'மஹாராஜர்' என்ற பெயரால் அழைக்கப் படுகிறான். 'மஹாராஜர்' என்றால் வ்யாக்கியானங்களில் பொதுவாக சுக்கிரீவரைக் குறிக்கும். ஸ்ரீராமரைப் பெற்ற தசரதனுக்குக் கூட அந்தப் பெயர் வாய்க்கவில்லை. அது போல ஸ்ரீராமனின் தம்பிதான் பரதன். ஆனால் பெயர் பரிபாஷையில் 'பரதாழ்வான்'. குகன் வேடுவத் தலைவன். ஆனால் பரிபாஷையில் 'குஹப்பெருமாள்'. வெறுமனே 'பெருமாள்' என்றால் ஸ்ரீராமனைக் குறிக்கும். குஹனுக்குப் பெருமாள் பட்டம். பரதனுக்கு ஆழ்வான் பட்டம். லக்ஷ்மணன் என்று சொல்வது குறைவு. 'இளையவில்லி' என்று சொல்லும் போதே ஸ்ரீவைஷ்ணவ பூர்வாச்சாரியர்கள் நாவில் ஒரு பெருமிதத்தோடு வெளிவரும்.
இவ்வளவும் சொல்வதற்குக் காரணம் உயர்ந்த தாழ்ந்த என்ற காரணம் பரிபாஷையில் வேலை செய்வதில்லை என்பதைக் காட்டவே. பரி என்ற முன்னொட்டின் பொருளில் in addition to, further; என்ற பொருளே ஈண்டு பொருந்துகிறது என்பது என் கருத்து. meta என்னும் ஆங்கில முன்னொட்டும் இந்தப் பொருளையே சுட்டும்.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் கோயில் என்றால் ஸ்ரீரங்கம்தான். மற்ற திவ்ய தேசத்துக் கோயில்கள், அடைமொழியிட்டு வரும். பெருமாள் கோயில்(காஞ்சீபுரம்) போல்வன. அடைமொழி இல்லாது கோயில் என்று சொன்னால் பூலோக வைகுண்டமானதும், ஸ்ரீவைஷ்ணவ ராஜதானியுமான ஸ்ரீரங்கம் என்று பொருளாகும். பெருமாள் என்றால் ஸ்ரீராமன், பெரிய பெருமாள் என்றால் ஸ்ரீரங்கநாதர். மற்ற திவ்ய தேசத்து மூர்த்திகள் எல்லாம் அடைமொழியோடு பெருமாள் என்று வரும். சௌரிராஜப் பெருமாள், புண்டரீகாக்ஷ பெருமாள் என்பது போல.
என்ன விஷயம் என்றால் community participatory authoring என்று ஒரு விஷயம் இருக்கிறது. பரிபாஷை என்பது இந்த வகையில் சேரும். அதனால் சில சொல்புழக்கங்கள் ஒரு குழுவில், ஒரு காலக் கட்டத்தில் பயன்பாடு மிகுதிப்படுவதாய்க் காண முடியுமே அன்றிக் குறிப்பிட்டு இன்னார், இன்ன தேதியில் இவ்வாறு சொல்லத் துவங்கினார் என்று அறுதியிடல் முடியாது. இந்த மாதிரியான hermeneutical அம்சங்களை இலக்கியத் திறனாய்வாளர்கள் உலக இலக்கியங்களில் கண்டு ஆய்கின்றனர். உதாரணத்திற்கு Wolfgang Iser என்பவர் The Implied Reader என்ற கொள்கையைச் சொன்னவர். அவருடைய கருத்து --
”.... Although reader and text assume similar conventions from reality, texts leave great portions unexplained to the reader, whether as gaps in the narrative or as structural limits of the text's representation of the world. This basic indeterminacy "implies" the reader and begs her participation in synthesizing, and indeed living, events of meaning throughout the process of reading. Such a theory of aesthetic response denies the simple dichotomy of fiction and reality. According to Iser, fiction proposes alternate worlds created within the virtual reality of the text's meaning. In other words, in literature the actual and the possible can exist simultaneously. Literature thus takes on a greater human function of imagining beyond the given constraints of experience.'
***
No comments:
Post a Comment