Monday, December 23, 2019

ஸ்ரீகிருஷ்ண ச்லோகங்கள் இரண்டு மொழிபெயர்ப்புடன்

ஸ்ரீ கீத கோவிந்தம் என்னும் நூலில் ஸ்ரீஜயதேவர் இயற்றியுள்ள ஒரு சுலோகம்

விபுல புலக புஜபல்லவ வலயித வல்லவ யுவதி ஸஹஸ்ரம் |
கரசரணோரஸி மணிகண பூஷண கிரண விபின்ன தமிஸ்ரம்||

இந்தச் சுலோகத்தின் சந்தத் துள்ளலிசைக்கு ஒட்டி வருமாறு இதைத் தமிழ்ப் படுத்த முடியுமா என்று பார்த்தேன். முயற்சி வெற்றியா இல்லையா என்பதை நீங்கள்தாம் சொல்ல வேண்டும்.

மெய்ப்புளகம்படும் மெல்லிய தோள்களின் கோபிகள் ஆயிரம் சூழ்தரும்
கைகளில் கால்களில் மார்வினில் மணிகெழு அணிகளின் கதிரொளி
கடியிருள் கண்ணனை களித்திடும் உள்ளம்.

*
ஸ்ரீ ரூப கோஸ்வாமி பாதருடைய உஜ்ஜ்வல நீலமணி என்னும் நூலில், கோபிகளின் மனநிலையைப் பற்றிய அற்புதமான விவரணை ஒன்று -

வ்யதீத்ய துர்யாமபி ஸம்சரிதானாம்
தாம் பஞ்சமீம் ப்ரேமமயீம் அவஸ்தாம்|
ந ஸமபவத்யேவ ஹரிப்ரியாணாம்
ஸ்வப்னோ ரஜோவ்ருத்தி விஜ்ரும்பிதோ ய:||

மூன்றைக் கடந்த நாலாம் உணர்வு நிலை துரியம்
அதையும் கடந்த ஐந்தாம் நிலையோ
பிரேம மயமான அவத்தை;
ஹரிப்ரேமை கொண்ட கோபியர்க்கோ
ரஜ குணத்தினால் விளையும் கனவுநிலை
என்றும் உண்டாவதே கிடையாது.

***

No comments:

Post a Comment