Thursday, December 19, 2019

முமுக்ஷு ஜிக்ஞாஸு

முமுக்ஷு, ஜிக்ஞாஸு, முமுக்ஷு என்றால் மோக்ஷம் அடைவதில் வேட்கை உடையவர். ஜிக்ஞாஸு என்றால் அறிவதில் இச்சை கொண்டவர்.

முமுக்ஷு என்கிற பதம் அல்லது சொல் எப்படி உருவாகிறது? தாது (வேர்ச்சொல்) என்ன? முச்ல் மோக்ஷணே இதி தாது.

“முமுக்ஷுவாகிறான் -- மோக்ஷத்திலே இச்சை உடையவனானவன் என்றத்தாலே, முச்ல்தாதுவுக்கு மோக்ஷணம் அர்த்தமாய், ஸந் ப்ரத்யயத்துக்கு இச்சை அர்த்தமாய், உ ப்ரத்யயத்துக்கு -- இச்சாश्ரயமான கர்த்தா அர்த்தமாகையாலே, மோக்ஷத்திலே இச்சையுடையவனானவன்-- முமுக்ஷுவாகிறான் என்று கருத்து” (சுத்தசத்வம் எம்பாவய்யங்கார் செய்தருளின அரும்பத விளக்கம்)

மோக்ஷம் என்கிற சொல் உருவாக்கம் எப்படி?

‘மோக்தும் இச்சு: -- முமுக்ஷு:’ என்று வ்யுத்பத்தி. மோக்தும் – விடுதலை அடைய, இச்சு: - இச்சை கொண்டவர்

ஜிஜ்ஞாஸு--- ஜ்ஞாதும் இச்சா ஜிஜ்ஞாஸா.
ஜ்ஞாதும் - அறியவேண்டி

முமுக்ஷு ஜிஜ்ஞாஸு என்ற பதங்களை ‘விடுதலை விரும்பி’ ’அறிவு விரும்பி’ என்று ஒரோவழி மொழிபெயர்க்கலாம். அறியாமல் விடுதலையை விரும்புதல் யாங்ஙனம்? அறிந்தபின்தானே விடுதலையில் நாட்டம் வரும். சரி ஒருவன் தான் இருக்கும் நிலையைப் பற்றி உணர்கிறான். விடுதலை அடைய விரும்புகிறான். விடுதலையை அடைய விரும்பியவன் தானே எப்படி அடைவது எது விடுதலையான நிலை என்று அறிய விரும்புவான். ஆக முமுக்ஷு என்பதும் ஜிஜ்ஞாஸு என்பதும் பர்யாய பதங்கள் (ஒரே பொருள் உடைய சொற்கள்) அல்ல. ஆயினும் ஒன்றோடொன்று கருத்தின் தொடர்பில் நிற்பன.

***

No comments:

Post a Comment