Thursday, December 19, 2019

எங்கள் ஊர் தாயுமானவர் என்றாலே

எங்கள் ஊர் தாயுமானவர் என்றாலே எனக்குக் கொஞ்சம் பயம்தான். ஏனென்றால் அவரிடம் எல்லாம் சொல்லிக்கொண்டே போய் பட்டென்று போட்டு உடைக்கும் ஸங்கதி தாயுமானவரிடம் சகஜம்.

’அவன் அன்றி ஓரணுவும் அசையாது’

என்று சொல்கிறாரே என்று பார்த்தால்,

‘எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால்’

அடுத்து என்ன சொல்லியிருப்பார் என்று யூகிக்க முடிகிறதா பாருங்கள்?

‘அறிவு ஆவது ஏது?
சில அறியாமை ஏது?
இவை அறிந்தவர்கள் அறியார்கள் ஆர்?

மௌனமொடு இருந்தது ஆர்?
என்போல் உடம்பு எலாம்
வாயாய்ப் பிதற்றுமவர் ஆர்?

மனது எனவும் ஒருமாயை எங்கே இருந்து வரும்?
வன்மையொடு இரக்கம் எங்கே?

புவனம் படைப்பது என்?
கர்த்தவியம் எவ்விடம்?
பூத பேதங்கள் எவிடம்?

பொய் மெய், ஹிதம் அஹிதமே,
வருநன்மை தீமையொடு
பொறை பொறாமையும் எவ்விடம்?

எவர் சிறியர்? எவர் பெரியர்?
எவர் உறவர்?, எவர் பகைஞர்?

(அடுத்த வரி என்ன போட்டிருப்பார்?)

யாதும் உனை அன்றி உண்டோ ?

இகபரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி
எங்கும் நிறைகின்ற பொருளே!

***

No comments:

Post a Comment