Monday, December 16, 2019

தேசிக சுலோகங்கள் மொழிபெயர்ப்பு

ஶ்ரீ வேதாந்த தேசிகரின் ஶ்ரீநியாஸ திலகம் (24) சுலோகம் ஒன்று. தமிழாக்கம் என்னுடையது.

உலகிருக்கும்வரை
உலகில் நீ இருக்கும்வரை
உடலிருக்கும் அதன்
வாழ்விருக்கும்
விண்ணுலக போகம் எனினும்
சின்னாள் இருந்து அழியும்
விட்டொழிந்தன அனைத்தும்
குருவின் ஆணையால்
அளிப்பான் அரங்கனும்
தன்னிருப்பிடம் திருநாடு நிலையம்
மீண்டும் ஏன் வருத்தம், மனமே!
வேறு என்ன உன் விருப்பம்
ஒன்றூம் இலையே.

*
யாவத் ஜீவம் ஜகதி நியதம்
தேஹ யாத்ரா பவித்ரீ
த்யக்தா: ஸர்வே த்ரிசதுர திந
க்லாந போகா நபோகா:|
தத்தே ரங்கீ நிஜமபி பதம்
தேசிகாதேசகாங்க்ஷீ
கிந்தே சிந்தே பரமபிமதம்
கித்யஸே யத் புநஸ்த்வம் || (24)

*
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் யதிராஜ சப்ததியில் ஸ்ரீராமாநுஜரது ஞான முத்திரையின் சிறப்பு குறித்து ஒரு சுலோகம் அருளுகிறார். அதன் தமிழாக்கம் -

ஒளிமிகு நகங்கள் இலக
உள் உள அழுக்கையெல்லாம்
கீறித்தான் எறிந்து விட்டே
கிளர்ந்தெழு ஞானம் வாய்க்க
உபதேசம் நல்கும் கையால்
உள்ளத் தடத்தில் மதிநலத்தை
ஓவி அன்ன வரைவார் போலும்!
காவித் துறவோர்க்குத் தலையானார்.

நாத: ஸ ஏஷ யமிநாம்
நக ரச்மி ஜாலை:
அந்தர் நிலீநம் அபநீய
தமோ மதீயம்
விஞ்ஞான சித்ரம் அநகம்
லிகதீவ சித்தே
வ்யாக்யாந கேளி ரஸிகேந
கராம்புஜேந.

*
ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் சுலோகங்கள் --

ஸ்ரீ நியாஸ தசகம் 5, ஸ்ரீ வேதாந்த தேசிகர்

த்வத் சேஷத்வே ஸ்த்திர தியம்
த்வத் ப்ராப்த்யேக ப்ரயோஜநம் |
நிஷித்த காம்ய ரஹிதம்
குரு மாம் நித்ய கிங்கரம் ||


உன் அடிமைத் திறத்தில்
திறம்பா மன உறுதி
உன்னை அடைவதுவே
உத்தம நல் ஒரே பயனாய்
பழித்த செயலும்
புன்பயன் கருதிய செயலும்
ஒழிந்தவனாய் எனை ஆக்கி
என்றும் உன் குற்றேவல்
செய்திடவே அருளுக நீ.

*
ஸ்ரீநியாஸ திலகம் 12

கல்பஸ்தோமே அபி அபாஸ்த த்வதிதர கதயோ
அசக்தி தீ பக்தி பூம்நா
ரங்கேச ப்ராதிகூல்ய க்ஷரண பரிணமந்
நிர்விகாதாநுகூல்யா: |
த்ராதாரம் த்வாமபேத்யாச் சரணவரணதோ
நாத நிர்விக்நயந்த:
த்வந்நிக்ஷிப்தாத்ம ரக்ஷாம் ப்ரதி ரபஸ ஜுஷ:
ஸ்வப்ரவ்ருத்திம் த்யஜந்தி ||

*
ஊழிதோறூழி உனையன்றி
வேறுகதியிலராய்
திறலற்றே, தெளிந்த ஞானத்தால்,
தீர்ந்த பத்திமையால்
நின்னடிமைத் திறம் பூண்டார்
கடிந்தவை ஒழித்தே கனிந்தநல்
உகப்புறு செய்கைகள் ஆர்ந்தே
தடையிலா காப்பென நின்னைத்
தளர்விலா தம்சரண வரிப்பால்
மறுக்கொணாப் புகலென நின்பால்
உற்றுநின் உகப்பேவல் புரியும்
விழைவினால் பனிப்புற்றாலும்
நின்னடி இணைகளில் விடுத்த
தம்முயிர்க்காப்பு பற்றியென்றும்
தாம் முனைந்தியற்றுமோர் முயற்சி
தவறியும் கொள்ளார் விடுவரே
திருவரங்கேசா என்னுடை முதலே!

(தமிழாக்கம் என்னுடையது)


No comments:

Post a Comment