காப்பாக நின்றாலும் ககனமெலாம் நிறைந்தாலும்
கருத்துக்கு அரியனாம் கார்வண்ணன்
கனிந்தருள் செய்பவன் கருத்தினில் இனிப்பவன்
காலத்தின் நாயகன் கலந்துளத்தின்
ஓர்ப்பாகிக் கற்பவன் உலகாகி நிற்பவன்
குணமேறி நிற்பதும் கண்டுவந்தே
கட்டிவிட வந்தவள் கருத்தழிய நின்றதும்
காணாத பேர்களும் கேட்டுவப்பத்
தீப்பாய்ந்த கானிலும் தப்பித்த அரவமும்
தப்பாமல் எய்துமச் சரமாகியே
தஞ்சமென அடைந்ததும் தவறாமல் எய்யவே
தரைதட்டி அழுத்தியக் கால்விரலையே
மீப்பதிய எழுத்திட்ட மாறாத விதியினில்
மாற்றிடவே அழுத்திட மனங்கனிவையோ
மகத்திற்கு மப்பாலும் மற்றணுவின் உட்பாலும்
முழுதாகி மகிழ்ந்துலவு மாதவனே.
***
No comments:
Post a Comment