Sunday, December 15, 2019

கலியன் மீது பாடல்

கலியன் மீது பாடல் 

வந்தார் எனநினைந்தே வந்தவழி பார்த்திட 
மந்தநகை பூத்தவர் மன்னனவன் மங்கைக்கு 
மந்திரத்தை ஓதி வழியான மாதவற்கு 
தந்திறமும் தானிழந்து தத்துவ மாயினரே 

ஆயின காலங்கள் ஆகுநற் காலங்கள் 
போயின எண்ணாமல் போனதென் நெஞ்சமே 
வாயின நாமங்கள் வாழ்க்கை அவன்தஞ்சம் 
சேயன நானெனது சேர்கதி யாரருளே 

ஆரருள் கொண்டாடும் அன்பர்தம் தாள்சேர்த்து 
காரிருள் போயகல கண்ணன் கழல்திண்ணம் 
வேருடன் வீயவினை நற்கதி தானாகும் 
பேருடன் மூர்த்தியினைப் போற்றுமின் நீரே 

நீர்நும தென்றிவையும் நாரணர்க் காக்கிட 
சீர்பெற சிந்தை சிதையாமல் வைமின்கள் 
ஆர்பொழில் அரங்கத்துள் அநந்த சயனன் 
ஓர்துயில் கொண்டுயர் உத்தமன் தாளே. 

***

No comments:

Post a Comment