என்னங்க? ஹாலிடேயா? ஜாலி. ஆமாம். ஒரே அலுப்பு. அதான் இன்னிக்கு லீவு போட்டேன். -- இப்படிப் பேசிக் கொள்வது யார்? மொழிதான் இப்படிப் பேசிக் கொள்கிறதாம். அப்படி மொழி ஹாலிடேயில் போகும் போது, லீவு எடுக்கும் போது, மனிதரின் பேச்சு, கருத்து என்ன ஆகிறது தெரியுமா?
முதலில் ஹாலிடே, விடுப்புநாள் என்பது என்ன? நாம் ஏதோ பணியில் குறிப்பிட்ட நோக்கத்திற்கு, குறிப்பிட்ட காலம் ஒப்பந்தப் பட்டிருக்கும் பொழுது நடுவில் ஒரு நாள் அந்த நியமம், கிரமம் அதிலிருந்து விடுதலையாகி ஓய்வு பெறுகிறோம். அப்பொழுது நம்முடைய விருப்பமான செயல்களில் ஈடுபடுகிறோம். அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது புறத்திலிருந்து யாரும் தீர்மானிப்பது அன்று. நாமே விருப்பத்தாலும், அவசியத்தாலும் தேர்ந்து கொள்வது. அது போல் மொழியின் ஹாலிடே என்று சொன்னால் மொழிக்கு என்று வழக்கப்படியான, எதிர்பார்க்கப்படும், வரையறையான விதங்களிலிருந்து மாறி, மொழி யதேச்சையாகப் பொருள்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுவது என்பதைக் குறிக்கிறது என்று கொள்ளலாம்.
ஏன் இந்தப் பேச்சு வந்தது என்றால் தத்துவ அறிஞர் விட்கென்ஸ்டைன் மொழிக்கு ஹாலிடே என்று ஒரு விஷயம் பேசுகிறார். மொழி ஹாலிடேயில் இயங்கும் பொழுது அங்கு தத்துவச் சொல்லாடல் பிறக்கிறது என்கிறார். அப்படியென்றால் மொழியின் பணிக்கால சொல்லாடல் என்பது என்ன? அதுதான் நேரடியாக இது இன்ன பொருள் என்று புறவயத்ததாகச் செயல்படுவது. விட்கன்ஸ்டைன் என்னும் தத்துவ அறிஞர் கூறுகிறார் --
Naming appears as a queer connexion of a word with an object. --And you really get such a queer connexion when the philosopher tries to bring out the relation between name and thing by staring at an object in front of him and repeating a name or even the word "this" innumerable times. For philosophical problems arise when language goes on holiday. And here we may indeed fancy naming to be some remarkable act of mind, as it were a baptism of an object. And we can also say the word "this" to the object, as it were address the object as "this"-a queer use of this word, which doubtless only occurs in doing philosophy.
***
No comments:
Post a Comment