ஓர் உபந்யாஸ கோஷ்டி. ஸ்ரீராமாநுஜர் 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்' என்னும் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தவர். திருவேங்கடமலையில் பூந்தோட்டம் வளர்த்து புஷ்ப கைங்கர்யம் பண்ண யாரேனும் துணிச்சல் மிக்க ஆண்பிள்ளை இந்தக் கோஷ்டியில் உள்ளனரோ என்று கேட்க ஒருவர் எழுந்தார். அவரே ஸ்ரீஅநந்தாழ்வான். அன்று இருந்த திருவேங்கட மலையின் சென்றணுக அருமைப்பாடு அப்படி இருந்தது போலும்! திருமலைக்குப் போய்விட்டாரே அன்றி ஸ்ரீராமானுஜ கோஷ்டியை இழந்தோமே என்று வருத்தம். அந்த வருத்தம் ஆறும்படியாக நான்கு செய்யுட்கள் பாடினார் ஸ்ரீஅநந்தாழ்வான்.
ஸ்ரீராமாநுஜ சதுஸ்ச்லோகி
அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம்
சரணாம் போருஹம் ஆதரேண பும்ஸாம்
விதரந் நியதம் விபூதிம் இஷ்டாம்
ஜய ராமாநுஜ ரங்கதாம்நி நித்யம்
புவி நோ விமதாந் த்வதீய ஸூக்தி:
குலிசீபூய குத்ருஷ்டிபிஸ் ஸமேதாந்
சகலீகுருதே விபச்சித் ஈட்யா
ஜய ராமாநுஜ சேஷசைல ச்ருங்கே
ச்ருதிஷு ஸ்ம்ருதிஷு ப்ரமாணதத்த்வம்
க்ருபயாலோக்ய விசுத்தயா ஹி புத்த்யா
அக்ருதாஸ் ஸ்வத ஏவ பாஷ்யரத்நம்
ஜய ராமாநுஜ ஹஸ்திதாம்நி நித்யம்
ஜய மாயிமதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய ப்ரமுகாடவீ க்ருசாநோ
ஜய ஸம்ச்ரித ஸிந்து சீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ச்ருங்கே
ராமாநுஜ சதுஸ்ச்லோகீம் ய: படேந் நியதஸ் ஸதா
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ:
இதை தமிழ்ப் படுத்தியிருக்கிறேன்.
தமிழாக்கம்
அன்பினால் அடியவர் என்றும் ஏற்றும்
மன்னும் திருவடி மலரே கதியாம்
உன்னும் உயருலகு உவப்பத் தருவாய்
மன்னும் அரங்கம் ஜயரா மாநுஜ!
அறிஞர் போற்றுநின் அருள்மிகு வாக்கு
மறித்திவ் வுலகில் மாற்றார் கருத்தைக்
குறியழித் திடுமோர் குலிசமாய் விளங்க
நெறிவாசல் வேங்கடம் ஜயரா மாநுஜ!
சுருதியும் மிருதியும் சுடர்மான தத்துவம்
கிருபையினால் ஆய்ந்து கலக்கமில் மதியினால்
அருள்சுரக்கு மணியதாய் அருளினாய் பாடியம்
அருளத்தி மலையதே ஜயரா மாநுஜ!
மாயாவாத இருளுக்கு பானுவே ஜயஜய
அயலார்வாத அடவிக்கு நெருப்பே ஜயஜய
அடியாரென்னும் கடல்பொங்கும் திங்களே ஜயஜய
முடியாதவ மலைமேல் மருவிடும் ஜயரா மாநுஜ!
நலந்திகழ் செய்யுள் நான்கிவை நித்தம்
உளங்கலந் துரைப்போர் உறுவது திண்ணம்
யதிரா சர்தம் இணைமல ரென்றும்
வதியும் புகலரு பரம பத்தியே.
ஸ்ரீராமாநுஜரின் பெருமை விளங்குவதாகுக.
***
No comments:
Post a Comment