’ஏகம் ஸத்; விப்ரா பஹுதா வதந்தி’ - இருக்கும் உண்மை ஒன்றே; அதனை ஞானிகள் பலவாறாக விளக்குகிறார்கள். - என்பது ரிக்வேத மந்திரம்.
ஸ்வரூபாநந்தர் தொகுத்தருளிய சிவப்பிரகாசப் பெருந்திரட்டில், சன்மார்க்கம் என்னும் தலைப்பில் காணும் இந்தப் பாட்டு வினாவிளக்கம் என்னும் நூலைச் சேர்ந்த செய்யுள் போலும்!
‘அறைந்தவெச் சமயக் கலையினும் எடுத்துக்
காட்டலாய் அருமறை முடிவில்
சிறந்தநற் பொருளாய் சிவனரி அயனால்
செப்பிய வருத்தமு மாகித்
துறந்துமற் றவிரோ தத்தையே துணிந்தோர்
சொல்லிடும் பொருளுமாம் ஒன்றை
நிறைந்தகைத் தலத்தின் மணியெனக் காட்டு
நீதிசன் மார்க்கத்தி னியல்பே.’
(வருத்தம் - முயற்சி, பிரயாசை; ஓர் அரிய பொருள் அந்தக் காலத்தியது. ஒப்பு நோக்க -- டாக்டர் உ வே சா அவர்களின் நூலில் வரும் வரி - வருத்தமிலாது கவிபாடுவார்.)
***
No comments:
Post a Comment