Friday, January 3, 2020

உத்தம நெறி

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நூல் வினாவிளக்கம் என்பது. ஸ்வரூபாநந்தர், தத்துவராயர் காலத்தது. ஸ்வரூபாநந்தர் திரட்டியருளிய பெருந்திரட்டில் சன்மார்க்கம் என்பதற்கு அவரால் இந்த நூலிலிருந்து செய்யுட்கள் கொடுக்கப்பட, சில செய்யுட்கள் தப்பின போலும்! அந்தக் காலத்திலேயே இப்படிச் சிந்தித்திருக்கிறார்கள்!.

பல நெறிகள், பல நூல்கள் கண்டு உவப்பார்களாம். அதைப் பிறர்க்குத் தெளிவிக்க வேண்டும் என்று முனைவதைவிட தமக்கு என்று உணர்வதை முக்கியமாகக் கருதுவார்கள். அதில் அதில் இருக்கும் உண்மையின் நன்மை என்ன உண்டோ அதைக் கண்டு மகிழ்வார்களாம். ஏதோ ஒரு நூலை மட்டும் உண்மை என்று வரையறை செய்து கொண்டு ஒருவழியில் ஒதுங்கி விட மாட்டார்கள். அதற்கென்று முற்ற முழுக்க ஒன்றை எதிர்த்து அதனோடு மோதி வருந்தமாட்டார்கள், அயரார். எப்பொழுதும் சித் சுகம் என்பதில் நிலைத்தவர்களாய் இருப்பார்கள். தம்மை நெருங்கியோருக்கும் அந்த சித் சுகத்தை விளைவிப்பார்கள். ஒரு தேசத்திற்கு, ஒரு காலத்திற்கு என்று சுருங்கிச் சிறையாகி நிற்க மாட்டார்கள். மிகப் பெரும் ஈறு நிற்கும் உண்மையை யாரே உள்ளவாறு அறிவார்!. அந்த உண்மையை என்றும் உளங்கொளும் இயல்போடு இருப்பது அந்த உத்தம நெறியாளர்க்கு இயல்பாம்.

‘உரைத்தநூல் முழுதும் தமக்கென உணர்ந்தங்கு
உண்மையின் நன்மைகண்டு உவப்பர்
வரைத்திட ஒன்றின் ஒதுங்கிடார் முழுதும்
ஆதலின் மாறுகொண் டயரார்
திரித்திறைப் பொழுதில் சிற்சுகம் அளிப்பர்
தேசகா லாதியற் றிருப்பர்
ஒருத்தரு மறியா ஒழிவிலா உண்மை
உத்தம நெறியினர்க் கியல்பே.’

***

No comments:

Post a Comment