வாழ்க்கையில் எந்த நிலையில் நிற்கிறோமோ அதை எப்படித்தான் அப்படியே பாடிவிடுகிறார்களோ! இப்படித்தான் இருந்து கொண்டே இருக்குமோ நம் நிலைமை! உதாரண மனிதராய் வாழாவிடினும் உதாரணத்திற்கான மனிதராய் வாழ வைப்பது நியாயமோ சொல்வாய் சிவமே!
’சீலமின்றி நோன்பின்றிச்
செறிவேயின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழிகாட்டி
வாரா உலக நெறியேறக்
கோலம் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே.’
‘கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
கேடிலாதாய்ப் பழிகொண்டாய்
படுவேன் படுவதெல்லாம் நான்
பட்டாற் பின்னைப் பயன் என்னே
கொடுமா நரகத்தழுந்தாமே
காத்தாட்கொள்ளும் குருமணியே
நடுவாய் நில்லாதொழிந்தக்கால்
நன்றோ எங்கள் நாயகமே.’
‘கோவே அருள வேண்டாவோ
கொடியேன் கெடவே அமையுமே
ஆவா என்னாவிடில் என்னை
அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவார் எல்லாம் என்னளவோ
தக்க வாரன்று என்னாரோ
தேவே தில்லை நடமாடீ
திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.’
(திருவாசகம்)
***
No comments:
Post a Comment