புலவர்கள் ஒருவருக்கொருவர் பொறாமையில் சண்டை போட்டாலும் ஒரு நயம் இருந்தது அந்தக் காலம். 250 வருடங்களுக்கு முன் நடந்ததாம். சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர் என இருவர். சர்க்கரைப் புலவரைச் சேதுபதிகள் மிகவும் ஆதரித்தமையைக் கண்ட சவ்வாதுப் புலவர் ஓர் உள்குத்துடன் வார்த்தை ஒன்று சொல்லுகிறார்.
‘சர்க்கரை கழுத்து மட்டும்தான். ஆனால் சவ்வாதோ கண்ட மட்டும் அன்றோ!’
அதற்கு சர்க்கரைப் புலவர் விடுவாரா?
‘அதுவும் அந்த மட்டும்தான் ஓய்!’
புரியவில்லையா? கழுத்து = கண்டம், இரண்டும் ஒருபொருள் மொழிகள்தாமே!
***
No comments:
Post a Comment